Home » » சஞ்ஜீவ கைது செய்யப்பட்டமையும் மிகப்பெரிய கண்டுபிடிப்புக்கள் மூன்றும்

சஞ்ஜீவ கைது செய்யப்பட்டமையும் மிகப்பெரிய கண்டுபிடிப்புக்கள் மூன்றும்

Written By මහා ශිෂ්‍ය සංගමය - රජරට විශ්වවිද්‍යාලය on Saturday, July 27, 2013 | 9:43 AM

சஞ்ஜீவ கைது செய்யப்பட்டமையும் மிகப்பெரிய கண்டுபிடிப்புக்கள் மூன்றும்




அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒன்றிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டார கைது செய்யப்பட்டுள்ளார் .இவர் நிபந்தனை பிணை விதியினை  மீறியதாலேயே கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த நிபந்தைனை பிணையானது ஒரு விசித்திரமான சட்டம் இச்சட்டம் மூலம் தெரிவிப்பது என்னவென்றால்,இனிவரும் காலங்களில் போராட்டங்கள் நடத்த முடியாது என்பதேயாகும் சஞ்ஜீவ கைது செய்யப்பட்டது போராட்டம் நடத்தியமையால் தான் .ஆனால் சட்ட புத்தகத்தின்  படி போராட்டம் நடத்துவது தவறான செயலில்லை. அப்படியானால்  சஞ்ஜீவ செய்த பிழை என்ன ? நீதிமன்ற அறிக்கையின் படி போராட்டத்தின் மூலம் பொது மக்களிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.இந்நிகழ்விலிருந்து நாம் வாழும் சமூகத்திற்கு தேவையான பெறுமதி மிக்க கண்டுபிடிப்புகள் மூன்றினை நாம் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்
முதலாவது எமக்கு எதாவது ஒரு விடயத்தினை அறிவிக்கும் போது அதற்கான காரணத்தையும் அதன் விளைவினையும் சரியான முறையில் அறிவிப்பதில்லை.அவற்றினை அரைகுறையாகவோ அல்லது குழப்பியோ தான் இந்த அரசாங்கம் எமக்கு அறிவிக்கின்றது.போராட்டங்களினால் பொது மக்களிற்கு இடையூறு ஏற்படுகின்றது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.ஆனால் இது மாணவ போரட்டங்களிற்கு மட்டுமல்ல.சில நாட்களுக்கு முன்னால் புகையிரத சேவையாளர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தின் போதும் அரசாங்கம் இக்குற்றச்சாட்டினையே சுட்டிக்காட்டியது.உண்மையில் ஆர்ப்பாட்டம்,போராட்டங்களினால் பொது மக்களிற்கு இடையூறு ஏற்படுகின்றதா? இல்லாவிடின் பொது மக்களிற்கு ஏற்படும் இடையூறுகள் காரணமாக போராட்டங்கள் நடைபெறுகின்றனவா? என்று  .
இவ்வாறு தற்போதைய கல்வியினால் மாணவர்களிற்கு அழுத்தங்கள்

ஏற்படுகின்றது.ஒரு சில நாட்களுக்கு முன்னால் பல்கலைகழக மாணவி ஒருவர் ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.அதுவும் அழுத்ததினாலேயே மேலும் மாணவர் ஒருவர் தனது விரிவுரையாளர் ஒருவரை கத்தியால் குத்தியதும்  கல்வி அழுத்ததினாலேயே, அதுமட்டுமல்ல சில தினங்களுக்கு முன்னால் ஒரு பத்திரிக்கையில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவ,மாணவிகளின் பாதி பகுதியினர் மன நிலை குறைபாடு உடைய நோயாளிகள் என தெரிவிக்கப்பட்டது.அதற்க்கும் இந்த கல்வி அழுத்தமே காரணம். இவ்வாறாக மக்களிற்கு ஏற்படும் அழுத்ததங்களே போராட்டமாக மாறுகின்றது.ஆனால் இந்த முறையினை மக்கள் பிழையான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.
 இரண்டாவது கண்டுபிடிப்பு தான் அரசாங்கம் "பொது மக்கள் " என கருதுவது யாரை? அதாவது அரசாங்கம் கூறுகின்றதைபோல் தொழிலாளர்கள் போராட்டத்தின் மூலம் பொது மக்களிற்கு இடையூறு உண்டாகுகின்றது.விவசாயிகளின் போராட்டத்தின் போதும்,மீனவர்களின் போராட்டத்தின் போதும் பொது மக்களிற்கு இடையூறு ஏற்படுகின்றது என்று.மேலும் மாணவர்களின் மீது போடப்படும் வழக்குகளில் பொது மக்களிற்கு இடையூறு விளைவிக்கின்றனர் என்றே பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.இவ்வாறு அரசாங்கம் கூறும் பொது மக்கள் எனும் பதத்தில் விவசாயிகள் இல்லையா?,தொழிலாளர்கள் இல்லையா?, மீனவர்களும் இல்லையா?,மாணவர்களும் இல்லையா?.அதாவது இடையூறிற்கு உள்ளாகிய மக்கள் யாருமே பொது மக்கள் எனும் பகுதியில் அடங்குவதில்லை.அரசாங்கம் "பொது மக்கள்","பொது மக்கள்" என கூறும் போது இவ்வாறு கூறுவது எம்மை பற்றி இல்லை என விளங்கிகொள்வதும் ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு இல்லையா?    


மூன்றாவது கண்டுபிடிப்பு ,இனிவரும் நாட்களில் நீங்களே கண்டுபிடியுங்கள்.அரசாங்கம் மாணவ போராட்டங்களை நிறுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டனர்.தாக்குதல் மேற்கொண்டனர்,வகுப்பு இடைநிறுத்தம் செய்தனர் மற்றும் ஆட்கடத்தலிலும் ஈடுப்பட்டனர்,திடீர் விபத்தினை போல் மற்றவர்ளுக்கு விளங்க மிக சூட்சம முறையில் பல மாணவ தலைவர்களை கொலை செய்தனர் .இவ்வாறான செயற்படுகளினால் எங்கள் போராட்டங்களை நிறுத்த முடியாமற் போய்விட்டது.ஆனால் இப்போது பாவிக்கும் மிகப்பெரிய துரும்பு சீட்டு நீதிமன்றமும்,சட்டமும் ஆகும் .முன்னால்நீதியரசருக்குஎதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை அமுல்படுத்திய காலகட்டத்தில் நீதிமன்றம் மற்றும் நீதிமன்றத்தின் மகத்துவம் ,தனித்துவத்தினை பற்றி பல்வேறு விடயங்களை பேசினார்கள்.ஆனால் நீதிமன்றமானது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதா? அல்லது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதா? என்பதை பற்றி புரிந்துகொள்ள  சஞ்ஜீவவின் இந்நிலையே போதுமானது.கண்,காது,மூளை உள்ள எவராயினும் மேற்கூறப்பட்ட கண்டுபிடிப்புகளை இனங்கண்டு புரிந்து கொள்வது பெரிய விடயமல்ல.ஆனால் எமக்குள்ள பிரச்சினை நாம் எல்லோரும் இந்த பிரச்சினையினை இந்த கண்ணோட்டத்தின் மூலமாகவா? பார்க்கின்றோம் என்பது தான் .....

               2013.07.14 திகதி ஜனரல பத்திரிக்கை பிரதம ஆசிரியர் கட்டுரையிலிருந்து ... 


Share this article :

0 comments:

Post a Comment